அமெரிக்காவின் கடற்படை விமானமான ஏ.வி-8 பி ஹாரியர், ஹேவ்லாக் என்ற இடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, விமானத்தை இயக்கிய விமானி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஏ.வி-8 பி ஹாரியர் அமெரிக்க கடற்படை விமானம், வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள செர்ரி பாயிண்ட் கடற்படை விமான தளத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. இந்த விமானம், ஹேவ்லாக் என்ற இடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு, விமானியை பத்திரமாக மீட்டனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
0 Comments