Tamil Sanjikai

நடிகர் அஜித் குமார், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தலைமை ஹெலிகாப்டர் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் பதவி வகித்து வந்தார். இவர் தலைமையில் இயங்கிய தக்சா குழு பல்வேறு வெற்றிகளையும், பாராட்டுகளையும் குவித்திருந்தது.

அவசரம் மற்றும் பேரிடர் காலத்தின்போது, மக்களுக்கு உதவும் வகையில், ஒருவர் பயணம் செய்யும் படியான நவீன விமானத்தை அண்ணா பல்கலைக்கழக குழு தயாரித்தது. இதில் ஆலோசகராக 10 மாதங்கள் பணி புரிந்த அஜித் குமார், விமான வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் பல்வேறு ஆலோசனைகளை தக்‌சா குழுவுக்கு வழங்கி வந்தார்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தக்‌ஷா குழுவினர் சார்பில் வடிவமைக்கப்பட்ட ட்ரோன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது,இந்த கண்டுபிடிப்பு அனைவரிடமும் பெரும் பாராட்டுக்களை பெற்றது மேலும் ஆஸ்திரேலியாவில் நடந்துமுடிந்த `Medical Express 2018 UAV Challenge’ சர்வதேசப் போட்டியில் தக்‌ஷா அணிக்கு 2-வது இடம் கிடைத்தது

இந்நிலையில், தற்போது அஜித்தின் பணி நிறைவு பெற்றுள்ளதாக அண்ணா பல்களைக்கழகம் அறிவித்துள்ளது. இதுவரை நடிகர் அஜித் ஆற்றிய பங்களிப்புகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் எம்.ஐ,டி. கல்லூரிகள் தரப்பில்அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருங்காலத்தில் நடிகர் அஜித்துக்கு விரும்பம் இருந்தால் அவர் தேவைக்கேற்ப ஆலோசகர் பணியில் மீண்டும் பணியாற்ற வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

0 Comments

Write A Comment