நியூசிலாந்தில் சாத்தம் தீவில் கரை ஒதுங்கிய 51 பைலட் திமிங்கலங்கள் என்கிற முதுகுத் துடுப்புடைய அரிய வகை திமிங்கில வகை உயிரிழந்துள்ளன. இப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 200-க்கு அதிகமான திமிங்கலங்கள் இறந்துள்ளது கடல் வாழ் உயிரின ஆர்வலர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நியூசிலாந்தின் இயற்கை மற்றும் வரலாற்றுச் சொத்துக்களை பாதுகாக்கும் அமைச்சகம் கடந்த 22-ஆம் தேதி ஹான்சன் வளைகுடாவில் 80 -90 திமிங்கலம் கரை ஒதுங்கியதாக தெரிவித்துள்ளது. அதில் பல திமிங்கலம் மீண்டும் கடலுக்குள் சென்றுவிட்டது ஆனால் 50 பைலட் திமிங்கலம் இறந்து போனது. ஒரு திமிங்கலத்துக்கு உயிரை காக்கும் முயற்சிகள் வேறுவழியின்றி மேற்கொள்ளப்படவில்லை. அந்த திமிங்கலத்தை காப்பாற்றுவதற்கான எந்த வழியும் இல்லை ஆகவே அப்படியொரு மிகவும் வருந்தத்தக்க முடிவு எடுக்கப்பட்டது. இது மிகவும் மனிதத்தன்மையற்ற செயலாகவும் இருந்தது. அப்படியொரு முடிவு எடுப்பது எப்போதுமே மோசமானது என்று சாத்தம் தீவின் மேலாளர் டேவ் கார்ல்டன் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தின் தெற்கு தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 800 கி.மீ தொலைவில் உள்ளது சாத்தம் தீவுகள். தொலைதூர பகுதியான இத்தீவில் மக்கள் தொகை அடர்த்தி குறைவாகவே உள்ளது. நியூசிலாந்தின் தெற்கு ஸ்டீவர்ட் தீவில் 145 பைலட் திமிங்கலங்கள் இறந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் சாத்தம் தீவுகளில் திமிங்கலங்கள் இறந்துள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை பத்து பிக்மி திமிங்கலங்கள் கடற்கரையில் இறந்த நிலையில் கண்டறியப்பட்டது. நியூசிலாந்தில் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது அரிதான விஷயமல்ல. ஆனால் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கும் நிகழ்வுகள் நடப்பது அரிதானது.
திமிங்கலங்கள் பயணிக்கும் திசையில் ஏற்பட்ட கோளாறுகள், மோசமான வானிலை காரணமாக அல்லது இரையை வேட்டையாடும் விலங்கிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் வழியை தவறவிட்டு கரை வந்திருக்கலாம் . மோசமான உடல்நிலை காரணமாக கூட பாதிக்கப்பட்டிருக்கூடும். இதனால் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியூசிலாந்தில் அதிகாரிகள் எப்போதுமே உள்ளூரில் மாவோரி சமூகத்துடன் இணைந்து திமிங்கலங்களை எடுத்து வரிசையாக அடுக்குவது வழக்கம். இறந்த திமிங்கலத்தின் தோல் மற்றும் கொழுப்பு திசுக்கள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது. இறந்த திமிங்கலங்கள் பின்னர் கடற்கரை மண்ணில் புதைக்கப்பட்டன.
0 Comments