Tamil Sanjikai

பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் கருப்புப் பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க பல நாடுகளின் ஆதரவை கோரி வரும் இந்தியா தற்போது, சவுதி அரேபியாவின் ஆதரவை பெற முயற்சிகள் மேற் கொண்டு வருகிறது.

பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் குழு சந்திப்பு வரும் அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடக்கவுள்ள நிலையில், பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்க்கும் முயற்சியில், இந்தியா, மும்மரமாக ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச நிதியத்தின் கீழ் வரும் இந்த பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பு, தீவிரவாதத்திற்கு நிதியுதவு செய்து வருவதாகவும், முறைகேடான பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்ட பாகிஸ்தானை, இது குறித்து விளக்கம் கேட்டு, சந்தேகப்பட்டியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் பாகிஸ்தான், இதுவரை, இது குறித்த, முறையான விளக்கம் எதுவும்அளிக்கவில்லை, இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக அந்த நாட்டை கருப்பு பட்டியலில் சேர்க்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இந்திய பிரதமர் மோடி, அயலுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர், ஐக்கிய நாடுகளின் பொது கூட்டத்திற்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, பல்வேறு நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் ஓர் அம்சமாக சவுதி இளவரசருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மேலும், கடந்த செப் 27., அன்று நடைபெற்ற, ஜக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டில் கலந்து கொள்ளவதற்கு முன்பு, சவுதி அரேபியா சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம், ஜம்மு காஷ்மீர் குறித்த எந்த தவறான பேச்சு வார்த்தையிலும் சவுதி இளவரசர் முஹமத் பின் சல்மான் ஈடுபடவில்லை என்பது இந்தியாவுக்கு ஆறுதலளிக்கும் ஒரு விஷயமாகும். இதை தொடர்ந்து சவுதி பயணம் மேற்கொண்ட அஜித் தோவல், இந்தியா சவுதி இடையான உறவை மேம்படுத்தும் வகையிலும், கருப்புப் பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க சவுதியின் ஆதரவை கோரும் வகையிலும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

இதனிடையில், தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில், நாடுகளுக்கிடையே நிலவி வரும் அரசியல் அபிப்பிராய பேதங்களை கைவிட்டு செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment