Tamil Sanjikai

சர்வேதேச அளவிலான டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளை சேர்த்து அதிவேகமாக 20, 000 ரன்களை கடந்துள்ள வீரர் என்ற சாதனையை, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.

வெண்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, மான்செஸ்டரில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோலி இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். நேற்றைய ஆட்டத்தின் 25 -ஆவது ஓவரில் 37 ரன்களை எடுத்தபோது கோலி மாபெரும் இச்சாதனைக்கு சொந்தக்காரரானார். இதன் மூலம், முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா ஆகியோரின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.

அவர்கள் இருவரும் 453 போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை கடந்த நிலையில், விராட் கோலி 417 போட்டிகளிலேயே இச்சாதனை மைக்கல்லை கடந்துள்ளார். கோலி இதுவரை மொத்தம் விளையாடியுள்ள 417 போட்டிகளில் 131 டெஸ்ட் ஆட்டங்கள், 224 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 63 டி -20 போட்டிகள் அடங்கும்

0 Comments

Write A Comment