நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டின் குடிமக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்தியில், தீபாவளி திருநாளில் சக குடிமக்களுக்கு எனது வாழ்த்துகளை நான் தெரிவித்து கொள்கிறேன். அன்பு, கவனிப்பு மற்றும் பகிர்ந்து அளித்தல் ஆகிய விளக்குகளை ஏற்றி, அதிர்ஷ்டமில்லாதோருக்கும் மற்றும் தேவைப்படுவோருக்கும் அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வருவதற்கான முயற்சியில் நம்மை ஈடுபடுத்தி கொள்வோம் என்று தெரிவித்து உள்ளார்.
0 Comments