ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த குடியரசுத் தனது தலைவருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், விரைவில் புதிய அமைச்சர்களின் பட்டியல் குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, மத்தியில் ஆட்சி அமைக்க பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்திருந்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘விரைவில் புதிய அமைச்சர்களின் பட்டியல் குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும். ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த குடியரசுத் தலைவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். புதிய அரசு பல்வேறு நல்ல திட்டங்களை விரைவில் செயல்படுத்தும். அனைவரும் ஒன்றாக இணைந்து புதிய உச்சங்களைத் தொடுவோம்’ என்றார்.
0 Comments