Tamil Sanjikai

செவ்வாய் கிரகத்திற்கு முதலில் யாரை அனுப்பவது என்பது தொடர்பாக தற்போது இந்தியா - அமெரிக்கா தொழிலதிபர்கள் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். இந்த பணிகளில் ஒத்துழைப்பு அளிப்பதாக இந்தியாவின் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தொழிலதிபர்கள் இருவரும் டுவிட்டர் பக்கத்தில் செவ்வாய்க்கு யாரை அனுப்புவது என்பது தொடர்பாக விவாதத்தில் ஈடுபட்டனர். கவிஞர்களை தான் முதலில் அனுப்ப வேண்டும் என ஆனந்த் மகேந்திரா தமது டுவிட்டரின் பதிவிட, பொறியாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளை அனுப்ப வேண்டும் என எலான் மஸ்க் பதிலிட்டார். அவர்களால் தான் புதிய கட்டமைப்புகளை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் கவிஞர்களை தான் முதலில் அனுப்ப வேண்டுமென்றும், கவிஞர்களை தவிர மற்றவர்கள் முதலில் செல்வதில் அர்த்தமில்லை என்றும் ஆனந்த் தமது கருத்தை பதிவு செய்துள்ளார். இதனால் செவ்வாய்க்கு யார் முதலில் செல்வார் என்பதில் சுவாரசியம் கூடியுள்ளது.

0 Comments

Write A Comment