Tamil Sanjikai

கேரளாவில் இருந்து கழிவுகள் ஏற்றி வந்த 27 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து, சுகாதாரதுறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட கனமழை வெள்ளம் காரணமாக அந்த மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டது. தற்போது அம்மாநிலத்தில் பயன்படுத்த முடியாத பொருட்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் சேகரிக்கப்பட்டு தமிழகத்தில் கொட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் வழியாக மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றிவந்த லாரிகள் புளியரையில் தடுத்து நிறுத்தப்பட்டது. லாரிகளை பறிமுதல் செய்த போலீஸார் சுகாதாரதுறையினரிடம் ஒப்படைத்தனர். பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த 23 லாரிகளுக்கு தலா ஒரு லட்சமும், மருத்துவ கழிவுகளை ஏற்றிவந்த 4 லாரிகளுக்கு தலா 3 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிலுள்ள கழிவுகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

1 Comments

Write A Comment