Tamil Sanjikai

காலம் கனிந்திருத்தல் பூங்கனி இனிய குரல்கனிய இன்னும் ஊராக உரக்க கேட்டு ரசித்து கொண்டிருந்திருப்போம். ஆனால் "இனி அது சாத்தியமில்லை," என தன் நிலையுணர்ந்து காலத்தின் கருவை விளக்குகிறார் பூங்கனி. "குரலை இழந்திடேன். பலம் எல்லாம் போச்சு. வயசாச்சில்ல?"

பூங்கனி - காலம் மறந்த கவிதை

எண்பது மூன்று வயதாகும் பூங்கனிக்கு கம்பூன்றி நடந்து திரிவதே சிரமம் தான். ஆதரவுக்கு ஆளின்றி தனிமையின் துணையில் தவிக்கிறார். இரண்டு அறை கொண்ட தன் வீட்டின் சமையல் அறையில் தானக சமைக்கிறார். ரேஷன் அரிசி தான்.

பூங்கனி - காலம் மறந்த கவிதை

“பெலன் இருந்தப்ப அவரு கூட ஒரு நாளைக்கு 2,3 ன்னு கச்சேரி பாடினேன். நான் கட்டையை கிரக்கிறது மாதிரி வேற யாரும் கிரக நான் பாக்கல. அது போல,நான் பாடி திரிந்த காலத்தில விரல் விட்டு என்னுற மாதிரி 3,4 பெண்கள் தன் வில்லுப்பாட்டு பாடினாங்க. அந்த காலத்தில 40, 50 வருஷம் முன்னால, அதுவே பெரிய மவுசு தான்!"

பூங்கனி - காலம் மறந்த கவிதை

"பத்து ரூபா பதினஞ்சு ரூபா சம்பளம் வாங்கின ஆம்பிள்ளைங்க மத்தில இருபது ரூபா சம்பளம் எனக்கு. மாட்டு வண்டியில இல்ல அம்பாசடர்ல தூத்துக்குடி, திருநெல்வேலி, சங்கரன்கோவில்ன்னு ஒரு கோவில் விடாம பாடியிருக்கேன். அது அந்த காலம். இப்ப அவரும் இல்ல பாட்டும் இல்ல. கடவுள் வரஞ்ச கோட்டை தாண்ட முடியதில்லா? எதோ ஓவொரு நாளும் ஏப்படியோ ஓடிட்டுயிருக்கு…. அவன் வச்ச நாள் வர!"

பூங்கனி - காலம் மறந்த கவிதை

"கோவில் கொடை பூங்கனி இல்லாம பூரணமடையதுன்னு என் காது பட கேட்டிருக்கேன். அனால் என்ன செய்ய? மக்கள் தந்த கௌரவம் அரசிடமிருந்து கிடைக்கவில்லையே! "

அகஸ்தீஸ்வரத்தை (கன்னியாகுமாரி) அடுத்த சரவணஞ்சேரி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த பூங்கனிக்கு 4 சகோதிரசகோதிரிகள். பூங்கனி கடைக்குட்டி. அப்பாவின் செல்ல பிள்ளை. "10,11 வயதிருக்கும் போது பக்கத்துக்கு ஊர் கோவில் கொடைக்கு போனப்பம் தான் முதல் முதலா வில்லுப்பாட்டு பாத்தேன்."

பூங்கனி - காலம் மறந்த கவிதை

"லக்ஷ்மி தனலெக்ஷ்மி சகோதிரிகள். மெய்மறந்திட்டேன். கச்சேரி பார்த்து கொண்டிருந்த கணமே மனம் பறிபோயிற்று. நான் வில்லுப்பாட்டு பாடணும், அந்த மெய்மறக்கத்தக்க கலையை நானும் படிக்கணும் என்று அப்பவே முடிவு செய்தேன். வேதமாணிக்கம் புலவிரிடம் வில்லுப்பாட்டு 1, 2 வருடங்கள் காட்டுக்கொன்டதுடன் கோவில்களில் பாட தொடங்கினேன்."

பதினைந்து வயதில் திருமணம். அவர் பெயர் தங்கபாண்டி. சக கலைஞர். "நாங்க இரண்டு பெயரும் கிளிகள் போல் கோவில் கோவிலா பாடி திரிந்தோம். ஏனோ கடவுள் எங்களுக்கு குழந்தை பாக்கியம் தரவில்லை. அதுக்கென்ன! ஊரில உள்ள எல்லா குழந்தைகளும் எங்க பிள்ளைகள் தானே!"

பூங்கனி - காலம் மறந்த கவிதை

"அவரு 30 வருஷம் முன்னாடி என்னை தனிமைல ஆழ்த்தி விட்டு போய்ட்டாரு. நானும் அவரு போன பின்ன பாடுறதை விட்டுவிட்டேன். அவரு இருந்தப்ப நெஞ்சோடிருந்த தைரியம் எல்லாம் என்னை விட்டோடி போச்சு. வந்திட்டு இருந்த வருமானம் எல்லாம் நின்னு போச்சு. அப்புறம் என்ன? இதே கத்தி தான்! அவன்கிட்ட எப்ப போய் சேருவேன் என்று ஒவொரு நாளும் எண்ணி கழிச்சிட்டு இருக்கேன்!" என்கிறார் தமிழ்நாட்டின் மூத்த வில்லுப்பாட்டு பாடகி பூங்கனி.

0 Comments

Write A Comment