தமிழகத்தில் கஜா புயலின் தாக்கத்தில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் விழுந்து கிடக்கின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட இடங்களில் பனை மரங்கள் உறுதியாக நிற்கின்றன. இயற்கை பேரிடரைத் தாங்கி உறுதியாக நிற்கும் பனை மரங்கள் இருக்கும் இடத்தில் நிலம் வளமாக, பிடிப்புடன் உறுதியாக இருக்கும், தூய்மையான நிலத்தடி நீர் இருக்கும். புயல் காலத்தில் காற்றின் சீற்றத்தை இந்த மரம் குறைத்துவிடும், இதன் காரணமாக பாதிப்பை கட்டுப்படுத்தலாம். பனை மரத்தின் வேர் ஆழமானதாக இருக்கும். மரத்தின் தண்டு பகுதி திடமானதாகவும் அதே சமயம் வளைந்து கொடுக்கும் தன்மையோடும் இருக்கின்றது. இதனால் பலமான காற்றின் தாக்குதலுக்கு தென்னை மரங்கள் உடந்து போனது போல இல்லாமல், பனை உறுதியாக நிற்கிறது.
இலங்கையில் 1970-ஆம் ஆண்டுகளில் புயல் தாக்குதலுக்கு தென்னை மரங்கள் அழிந்தது. அப்போது ,பனை மரங்கள் மட்டுமே புயலை தாங்கி நின்றது. இதனை அவதானித்த இலங்கை அரசு , பனை பயிரிடுவதை பெருமளவு ஊக்குவித்தது. தமிழகத்தின் மாநில மரம் என்ற பெயரை பெற்றிருந்தாலும் பனையின் பயனை அறியாமல், தமிழகத்தில் பல லட்சம் மரங்கள் செங்கல் சூளை போன்ற தொழில்களுக்காக வெட்டப்பட்டன. வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில் பனை பொருட்களின் பயன்பாடு மிகவும் அதிகம். பண்டையக் காலத்தில் பனையின் பயன்பாடு இருந்ததற்கான சான்றுகள் பல சங்க இலக்கியங்களில் இருக்கின்றன . பனையால் செய்யப்படும் கருப்பட்டி, விசிறி, பாய், கூடைகள், மருந்துபொருட்கள், கிழங்கு, பழம் இப்படி பலவகைகளில் பனையின் பொருட்களை பயன்படுத்தலாம். பனை வேலை செய்யப்பவர்களுக்கு ஊக்குவித்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பை தருவதோடு கிராமங்களின் பாதுகாப்பையும் அதிகரிக்க முடியும்.
முன்பு அதிகமாக பனை மரங்கள் நின்ற பல கடற்கரைகளில் பனை மரங்களை இப்போது பாரக்க முடியவில்லை . கிராமங்களில் பரவலாக காணப்பட்ட பனை மரங்களை இழந்து நிற்பதால்தான் இயற்கை பேரிடர்களின் தாக்கத்தை குறைக்க முடியவில்லை. பனை மரம் வளர்வதற்கு பல ஆண்டுகள் ஆகும். ஆனால் சுமார் நூறு ஆண்டுகள் வரை பயன் தரும். மண்ணரிப்பை தடுக்கும். மற்ற விதைகளைப் போல பனை விதை பறவைகளின் எச்சத்தால் விதைக்கப்படுவதில்லை. இதை மனிதர்கள் தன விதைக்க வேண்டும்.
பண்டைய காலங்களில் சுமார் முப்பது வகையான பனை மரங்கள் இருந்திருக்கிறது. தமிழகத்தில் சீனி பனை, தாளி பனை மற்றும் கூந்த பனை என்ற மூன்று வகை பனைகள் மட்டுமே பெருமளவு காணப்படுகின்றன. இதர பனை மரங்களை பற்றிய எந்த தகவலும் இல்லை . பனை தொடர்பான செய்திகளை சேகரித்து, பனை பொருட்களின் பயன்பாடுகளை அதிகரிக்க விழிப்புணர்வுகளை இப்போது பலரும் ஏற்படுத்தி வருகின்றனர்.
0 Comments