இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 4 - ஆம் தேதி இந்திய கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 46-வது கடற்படைதினம் ஆகும்.
1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற யுத்தத்தில் இந்திய கடற்படையானது டிசம்பர் நான்காம் தேதி அன்று பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தின் மீது ஒரு அவசர கடல்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானிய கப்பல்களாகிய பி.என்.எஸ். முஹபிஸ் மற்றும் பி.என்.எஸ் கைபரை இந்திய ஏவுகணைகள் தாக்கி மூழ்கடித்தன.
இன்னொரு பாகிஸ்தானிய கப்பலான பி.என்.எஸ். ஷாஜஹான் இந்திய கடற்படையால் சேதப்படுத்தப்பட்டது.
மேலும் இந்தியாவின் ஏவுகணை தாங்கி படகுகள் கராச்சி துறைமுகத்தில் உள்ள எரிபொருள் கிடங்குகளைத் தாக்கி தீக்கிரையாக்கின. இந்த தாக்குதல் நடவடிக்கைகளின் பெயர் ஆபரேஷன் திரிசூலம் எனஅழைக்கப் பட்டது. ஆபரேஷன் திரிசூலம் இந்திய கப்பற்படைக்கு ஓர் மாபெரும் வெற்றியாக அமைந்தது,ஏனெனில் இந்தத் தாக்குதலில் இந்திய கப்பற்படைக்கு எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை.
இந்த ஆபரேஷன் வெற்றியை அடுத்து பாகிஸ்தானிய கடல் எல்லை மீது 'ஆபரேஷன் மலைப்பாம்பு' என்று மற்றொமொரு தாக்குதலை இந்தியா மேற்கொண்டது.
இந்த தாக்குதலின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நான்காம் தேதியை இந்தியா கடற்படை தினமாகக் கொண்டாடுகிறது .
இந்திய கடற்படையானது உலகின் ஐந்தாவது மிகப்பெரிய கடற்படையாகும்.
இந்திய கடற்படையானது மூன்று மண்டலப் பிரிவுகளை கொண்டுள்ளது.
கிழக்கு மண்டலக் கடற்படைப் பிரிவின் தலைமையகம் விசாகப்பட்டினத்திலும், மேற்கு மண்டலக் கடற்படைப் பிரிவின் தலைமையகம் மும்பையிலும் , தென் மண்டலக் கடற்படைப் பிரிவின் தலைமையகம் கொச்சியிலும் அமைந்துள்ளது . இம்மூன்று மண்டலங்களின் கீழ் இந்திய கடற்படை 66 கடற்படைத் தளங்களை நிர்வகித்து வருகிறது.
0 Comments