Tamil Sanjikai

பிரதமர் மோடி வரும் 19-ஆம் தேதி கன்னியாகுமரி வருவதாக இருந்தது, ஆனால் தற்போது அந்த பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வரும் 19-ஆம் தேதி கன்னியாகுமரி வரவிருப்பதாகவும், பணி முடிக்கப்பட்ட சாலை, பாலங்களை திறந்து வைப்பதோடு புதிய சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து பா.ஜ.க சார்பில் கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்ற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், வரும் 19-ஆம் தேதிக்குப் பதிலாக அவர் மார்ச் 1-ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வரவிருப்பதாகவும் பா.ஜ.க. தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments

Write A Comment