Tamil Sanjikai

புகழ் பெற்ற அமெரிக்க ‘பாப்’ இசை நட்சத்திரமும் நடிகையுமான மைலி சைரஸ் (வயது 26), தனது காதலரான ஆஸ்திரேலிய நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த்தை (28) புதன் கிழமை டெக்ஸாஸில் உள்ள தனது வீட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

"தி லாஸ்ட் சாங்" என்ற படத்தின் படப்பிடிப்பு தளத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் சந்தித்தனர். அப்போது இருவருக்கு இடையேயும் காதல் மலர்ந்தது. இருவரும் பல இடங்களில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக்கொண்டார்கள். 2012-ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அடுத்த ஆண்டே அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

பிரிந்த ஜோடி, 2015-ம் ஆண்டு சந்தித்து மீண்டும் தங்களது காதலை புதுப்பித்து கொண்டனர். கடந்த மாதம் ஏற்பட்ட காட்டுத்தீயில் இந்த ஜோடியின் வீடு எரிந்து நாசமானது. ஆனால் அது அவர்களுடைய காதலுக்கு ஒரு தடையாக இருக்கவில்லை. இந்த நிலையில் டென்னிசி மாகாணத்தில் உள்ள தனது பங்களாவில் வைத்து மைலி சைரஸ், தன் காதலர் லியாமை மணந்து கொண்டார். இந்த திருமணத்தில் மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. டுவிட்டரில் மைலி சைரஸ் திருமணம் தொடர்பான படத்தை வெளியிட்டு தங்களது திருமணத்தை உறுதி செய்துள்ளார்.

0 Comments

Write A Comment