முற்றத்து மேட்டில் காயும்
மரச்சீனி துண்டுகளை கொறிக்க வருமே
அந்த சடைவால் அணில்.
அத்தகையதாயிருந்தது,
யாரும் பார்க்கா சமயத்து என் இதயம் வருடும் உன் கடைக்கண் பார்வையும்...
வெள்ளைச்சோறு வந்த பின்னே, பரண் மீது கிழங்கேது?
இன்று மூத்தமருமகள் நட்டு வைத்த முல்லைக்கொடி முற்றத்தில் சிரிக்கிறது.
அணிலில்லை. ஓர் சிட்டு அதை தவிக்கவிட்டு தூரமாய் பறக்கிறது!
உன்னைப்போல!
- பினோ செல்வராஜ்.
0 Comments