Tamil Sanjikai

அஞ்சாப்பு படிக்கையில
அரைடவுசர்தான் அலங்காரம்..
பெல்டெல்லாம் ஆடம்பரம்
அரைஞாண்கொடிதான் ஆதாரம்..
பின் பக்க கிழிசல் "ஓட்டை"
அவனுக்கான அடையாளம்..
கிழிஞ்ச ஓட்டையில
கல்லள்ளி போட்டாக...
சிரிச்சிகிட்டான்!
மண்ணள்ளி போட்டாக..
பொறுத்துகிட்டான்!
பேப்பரை மடிச்சி போட்டு
"போஸ்ட் பாக்ஸ்""போஸ்ட் பாக்ஸ்னு"
பொம்பள பிள்ளைக கூப்டப்பதான்...
அவமானமா போயிட்டு..
அழுகையும் சேர்ந்துகிட்டு..
தீபுடிச்ச வறுமையினா..,
சின்ன பையன் என்ன செய்வான்????
இப்பெல்லாம் அவனிடம்...,,
கலர் கலரா சட்டையிருக்கு..
கால் டவுசர் பத்திருக்கு..
கழுத்தில செயினிருக்கு..
காரிருக்கு,வயிலிருக்கு..
கண்டதெல்லாம் வாங்கி சேர்க்க
கனரா பேங்ல காசிருக்கு .... இருந்தாலும்,
போஸ்டாபீஸ்ல தொங்கிட்டிருக்கும்
போஸ்ட் பாக்ஸ பார்க்கும் போது
உள் மனசுல உறுத்தலிருக்கு..
உயிரில் கொஞ்சம் வலியிருக்கு.!!!

- தெரிசை சிவா

0 Comments

Write A Comment