Tamil Sanjikai

என்னவோ அவனுக்கு
அது பிடிக்க வில்லை..
கொண்டு வந்து வைக்கும்போதே
குமட்டலாய் இருந்தது..
மல்லிகைப்பூ இட்லியும் மசாலா தோசையும்
அப்படியே தின்னத் தோன்றும்...
அல்லிப்பூ ஆப்பமும்
பார்த்தாலே பசி தணியும்...
பௌர்ணமி இடியாப்பமும்
கொழுத்த கன்னம்போல
கொவந்த ரச வடையும்
உளுந்தங்கஞ்சியும்
கொத்த மல்லி தொவையலும்
கருவாட்டுக் குழம்பும்
கொடியடுப்பு பழங்கறியும்
அவியலும் பொரியலும்
பச்சடியும் கிச்சடியும்
நாக்கை சுண்டியிழுக்கும்..
எளுசேரி புளிச்சேரியும்
மிச்சம் மீதி ஏதுமில்லாம
மொத்தமாய் தின்பவன்ட போய்...
பீட்சாவ கொடுத்திட்டு
பிச்சு பிச்சு தின்னுன்ணா...
பாவம் என்ன செய்வான்?
"பீட்சா"-கிற பெயரே
பிடிக்கவில்லை அவனுக்கு..
அழுத்தி.... சொல்லிப்பார்த்தான்
அசிங்கமாக இருந்தது..
கூட வந்த நினைவுகளால்
குமட்டவும் செய்ததது..
தின்னுதான் பாப்போமேன்னு
சின்ன துண்டை கையிலெடுத்து...
வாய் வரைக்கும் கொண்டு செல்ல
வழ வழன்னு நூலடிக்க
உள்ளுக்குள் வச்ச வெண்ணை..
உயிர் போகும் மணம்(?) பரப்ப
த்தூ...ன்னு துப்புனவன்தான்....
துப்புணி கூட இறக்க வில்லை..!
பீட்சா திங்காத இவனை
பிச்சைகாரனை போல்..... பார்ப்பதைதான்...
ஏனென்று தெரியாமல் ஏங்கி கொண்டிருந்தான்.....
இரவு முழுதும்......!!!!!!!!

- தெரிசை சிவா

0 Comments

Write A Comment