Tamil Sanjikai

மழலை என்னும் மாதுளங்கனியே... !
கோடி கோடியாய் மனிதன் இருந்தும்,
பிரம்மன் குறைவில்லாமல் தொடர்கிறான்;
தம் படைத்தல் தொழிலை!
மழலை உன் முகம் காண்பதற்காய்!
உன் ஒரு புன்னகை போதும்!
கடவுள் இல்லாமலேயே கவலைகள் தீரும்!
சிரிப்பைக் கொஞ்சலாக்கி,
அழுகையைக் கெஞ்சலாக்கி,
உன் அன்னை தந்தையையே ஆட்டுவித்தாய்!
யாழினும்,குழலினும் உன் மொழி சிறந்ததென்று,
வள்ளுவனும் வாக்குரைத்தான்!
குழந்தையாய் இன்று நீ அமர்ந்திருந்தாலும்...
நாளைய பாரதம் நமதென்று முழங்கு!
உன் எண்ணங்களில் ஏறு பூட்டி,
ஆசிரியர்களின் அறிவுரையை உரமாக்கி...
கனவுகளை பாத்திகளில் ஊன்றி வை!
ஒருநாள்... உன் கனவுகள் மெய்ப்படும்!
உலகம் உன்னை அண்ணார்ந்து பார்க்கும்!
அறிவும் வளரும்; உடலும் உடன் வளரும்.
மனதை என்றும் மழலையாக்கி,
உன் புன்னகை குறைவில்லாமல் பூக்கட்டும்!
குழந்தையாய் இன்று நீ அமர்ந்திருந்தாலும்...
நாளைய பாரதம் நமதென்று முழங்கு!
நாளைய பாரதம் உனதென்று முழங்கு!

- பினோ செல்வராஜ்

0 Comments

Write A Comment