சாதி சுமக்கும் தகப்பனே !
உன் ஆதி விந்தாய் நானிருக்க
பெட்டை மூதியாகிடுமோவென
ஓதி ஓதித் திட்டி தீர்த்தாய்.. கேட்டுக்கொள்!
நான் பெட்டையென்பதுயென் பெருமையே..
தீட்டெனும் தீமையே
சுமப்பதுன் வன்மையே..
கருவாகி உருவாகி
சிசுவாகி பெண்ணாகி
நாட்டின் கண்ணாகி
பூமிச்சறுக்கில் வந்தமர்வேன்
சிரிப்பேன் மகிழ்வேன்
சாதி பார்க்காத காதல் கொள்வேன்..
இதிலுனக்கேதும் அரிப்பெனில் - இனிநீ
புணர்கையில் உறையொன்றிட்டு
உன் வீண்விந்தைக் குப்பையில் கொட்டு..
-அகிலன்
0 Comments