கடைசி முன்பதிவு மறுக்கப்பட்ட
கடவுளுக்குத் தட்கலுக்கான
வாய்ப்பு வழங்கப்பட்டது.
முக்காலமும் அறிந்த அவர்
அதன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல்
தோற்றுப் போனார்.
முன்பதிவு இல்லாமல்
செல்லத் தீர்மானித்தக் கடவுள்
சிறுநீர்க் கழிக்கக் காத்திருந்தார்.
மலம் கழிக்க வரிசையில் நின்றார்.
கும்மாளத்துக்குக் குறைவு இல்லாத
பொதுப் பெட்டியில்
குத்துப் பாட்டுக்கு நடனமிட்டார்.
பெட்டிக்கு நால்வரைச் சுமக்கும்
குளிர்பதனப் பெட்டிக்கும்,
பெட்டிக்கு நானூறைச் சுமக்கும்
பொதுப் பெட்டிக்கும் இருந்த
வேறுபாட்டைப் பார்த்த கடவுள்
சுவிஸ் பேங்கில் ஒரு கள்ளக் கணக்குத்
துவங்குவது என தீர்மானமாக முடிவெடுத்தார்...
-விகடபாரதி
0 Comments